About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Monday, January 23, 2017

ஐயம் தீர்க்கும் ஐயப்ப மந்திரங்கள்



ஐயம் தீர்க்கும் ஐயப்ப மந்திரங்கள்:
''ஐய '' என்றால் ஆர்ய. ஆர்ய என்பதன் திரிபு ''ஐய ''.ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று  பொருள்.பரமேஸ்வரனுக்கும்  நாராயண மூர்த்திக்கும் மகனாக பிறந்து ஞானமும் , தவமும்,கலந்த  சிவாம்சமும் ,கிருபையும் சவுந்தர்யமும் சக்தியும் கலந்த விஷ்ணுவின் அம்சமும் ஒருங்கே அமையப்பெற்ற ஐயப்பனுக்கு நிகர் வேறு எந்த தெய்வமும் இல்லை என்பது ஐயப்பனை  வழிபடுவோரின்  கருத்து.ஐயப்பன்  குளத்து புழை  என்ற இடத்தில பாலகனாகவும் சபரி மலையில் கெளமார  கோலத்திலும் ,  ஆர்யங்கவில் தாம்பத்திய கோலத்திலும் (பூர்ண புஷ்கலா சமேதராக)அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும்  காந்த மலையில் ஜோதியாகவும் வீற்றிருப்பதாக   ஐதீகம்.
கறுப்பு  நிறம் விஷ்ணுவின் நிறம். வெண்மை சிவபிரானின் நிறம். எந்த பொருளை எரித்தாலும் கருப்பு நிறம் ஏற்படும் . அதையும் முற்றிலும் எரித்தால் வெண்மை நிறம் வரும். விஷ்ணு நிறமான கருப்பு நிறம் அணிந்து சிவனின் நிறமான வெண்மை நிற ஜோதியை தரிசிக்க நாம் சபரிமலைக்கு யாத்திரை போகிறோம்.
சாஸ்தா  என்றால் கட்டளை இடுபவர் என்று பொருள்.உலகமே இவர் கட்டளையில்தான் இயங்குகிறது .நாராயணிடம் இருந்து நம் வாழ்கையை பரி பாலிக்கும் சக்தியையும் , பரமேஸ்வரனிடம் இருந்து நமக்கு ஞானத்தை தரும் சக்தியையும் ஓன்று சேரப்பெற்று சாந்த சொரூபமும் காருண்ய லாவண்யமும் ஓன்று சேர அமையபெற்ற ஒரு தெய்வமாக ஐயப்பன் விளங்குகிறார்.ஐயப்பன்  வழிபாட்டில் கடவுள் பக்தி , குரு பக்தி , சமய பக்தி ஆகியன தீவிரமடைகிறன. '' சுவாமியே''  என்ற பதத்தினால் ஜீவான்மா , பரமான்மா  ஐக்கியமும்,  ''சரணம்''  என்ற பதத்தினால் ஞானம் ,வினயம்,தியாகம்,ஆகிய உணர்வுகளும் பக்தர்களுக்கு ஏற்படுகின்றன.  இதனாலேயே ஐயப்பன் வழிபாட்டில் ''சாமியே சரணம் ஐயப்பா '' என்ற கோஷம் மிக மிக  முக்கியமாகிறது. 
மஹா சாஸ்தா மூல மந்த்ரம்  பின்வருமாறு அமைகிறது:
''ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் நமோ பகவதே  ஹரி ஹர புத்ராய , சர்வலோகதயாபராய  மமவசம் குருகுரு ஸ்வாஹா ''.

இருவகை ஸ்ரீ சாஸ்தா காயத்ரிகள் பின்வருமாறு வருகின்றன:
'' ஓம் பூத நாதாய வித்மஹே  பவபுத்ராய தீமஹி தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத் ''
' ஓம் பூத நாதாய வித்மஹே ம்ஹாதேவாய தீமஹி  தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத் ''
மஞ்சமாதா மூல மந்த்ரம் பின்வருமாறு அமைகிறது:
''ஓம் ஹ்ரீம் விஷ்ணு மாயே நம: ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா , ஒம் ஹ்ரீம் ஹ்ரீம் மஞ்சாம்பிகாயை  மஹா சாஸ்த்ரு பரிவாரையை வாயவ்யஸ்திதாயை  ஜகன்மோஹின்யை  மஹாமாயே ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாக ''
ஸ்வாமியே   சரணம் ஐயப்பா !
''மெய் எல்லாம் திருநீறாக வழி எல்லாம் அருள்நீராக பொய் இல்லா  மனத்தராகி  புலனில் அவர் ஒருத்தராகி ஐயன் அரிஅரன்  மைந்தன் திருத்தாள் பற்றி விம்மி ஐயனே ஐயப்பா  என்பார் அவர் பதம் வணக்கம் செய்வோ
 

No comments:

Post a Comment