About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Saturday, January 1, 2011

ருத்ராட்சங்களின்முகங்களும் அதன் தன்மைகளும்

ருத்ராட்சங்களின்முகங்களும் அதன் தன்மைகளும்




ருத்ராட்த்தின் முகங்களும் அதனை அணிவதால் ஏற்படும் பலன்களும்

1முகம் ருத்ராட்சம் சிவனுடைய அம்சம்.இதை அணிவதால் பிரம்மஹத்தி
தோஷம் அகலும்.
2முகம் ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வர் அம்சம்.இதை அணிவதால் பசுவின்
சாபம் நீங்கும்.
3 முகம் ருத்ராட்சம் அக்னி அம்சம்.பெண்ணின் சாபம் நீங்கும்.
4 முகம் ருத்ராட்சம் பிரம்மா அம்சம்.கொலை பாதக பாவம் அகலும்.
5 முகம் ருத்ராட்சம் காலாக்னிஅம்சம்.சிவனின் அம்சமான ருத்திரனது
வரம் கிடைக்கக் காரணமாகும்.
6 முகம் ருத்ராட்சம் சுப்ரமணியர்-முருகக்கடவுளின் அம்சம்.பாவங்கள் நீங்கும்.
முருகக்கடவுளின் அருள் கிடைக்கும்.(கடவுள்களில் முருகக்கடவுளின் அருளும்
காட்சியும் கிடைப்பது மிக அரிது என்பதை உணர்க)
7 முகம் மன்மதனின் அம்சம்.வெல்வ வளம்,ஞானம்,சகல சம்பத்துகளும்
கிடைக்கும்
8 முகம் கணபதி என்ற விநாயகக்கடவுளின் அம்சம்.இதை அணிந்தால்
அஷ்டவசுக்களின் ஆசிர்வாதமும்,கங்கையின் அனுகூலமும் கிடைக்கும்
9 முகம் பைரவர் அம்சம்.பிரம்ம ஹத்தி தோஷம் விலகும்.சிவ லோகப்பதவி
கிடைக்கும்(ஏசு நாதருக்கு சிவலோகப்பதவி கிடைத்துள்ளது.அவருக்கு எப்போதும்
மறுபிறவி கிடையாது)
10முகம் விஷ்ணுவின் அம்சம்.கிரக-சர்ப்ப-பைசாச (பேய்)தோஷம் விலகும்.இந்த
ருத்ராட்சம் முற்பிறவியில் மந்திரவாதியாக இருந்தவர்களுக்கு தேவை.
11 முகம் ஏகாதசருத்ர அம்சம்.இதை அணிந்தால் ஒரு கோடி பசுக்களை தானம்
செய்த பலன் கிடைக்கும்.
12 முகம் பன்னிரு சூரியன் அம்சம்.இதை அணிந்தால் அஸ்வமேத யாகம் செய்த
பலன் கிடைக்கும்
13முகம் ஸதாசிவம் அம்சம்.சிவபெருமான்களில் இவரே மிக உயர்ந்தவர்.மேலும்
விபரமறிய சிவ அடியார்களிடம் அணுகவும்.இதை அணிந்தால் காரிய வெற்றி
உண்டு
14 முகம் ருத்ரமூர்த்தி அம்சம்.மோக்ஷ்ம் கிடைக்கும்
32 முகம் உண்டு.இதுவும் ஒரு முகமும் கிடைப்பது மிக அரிது.
இந்த இரண்டு ருத்ராட்சங்களையும் தலா ரூ.1,00,000/-கொடுத்துவாங்குவோரும்
உண்டு.

No comments:

Post a Comment